Pambai Folk

செல்லாத்தா பாடல் வரிகள் | Mariamman songs lyrics | Amman songs lyrics

செல்லாத்தா பாடல் வரிகள் | Mariamman songs lyrics | Amman songs



செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா (2)


கண்ணாத்தா உன்னைக் கானாட்டா இந்த கண்களிலிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா!


உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா!

செல்லாத்தா


தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிட்டு (2) தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா...நாங்கள் (2) வளமான வாழ்வு கொடு மாரியாத்தா -நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா...


நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறைய கேட்டுட்டு (2)


பசும்பாலைக் கறந்து கிட்டு கறந்த பால எடுத்துக்கிட்டு (2) புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா - நாங்கள் (2) பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா...- செல்லாத்தா நீ பாம்பாக மாறி....


நீ பாம்பாக மாறி அதை பாங்காகக் குடித்துவிட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா


உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா! செல்லத்தா





 இந்தப் பாடலை உங்களுக்காக தந்தவள் பதிவிட்டு உள்ளவர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon