Pambai Folk

மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரி | malayanur angalamman padal lyrics

மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரி | malayanur angalamman padal lyrics





மஞ்சிளிலே நீராடி குங்குமத்தால் பொட்டு இட்டு பூவாடை காரியம்மா... நீ மருளாடி வந்திடும்மா... உடுக்கை பம்னை முரசொலிக்க உருமி மேளம் தான் ஒலிக்க சித்தாங்கு ஆடைகட்டி தாயே நீ சீறி எழுந்திடம்மா மேல்மலையனூரில் கோயில் கொண்ட என் அங்காள ஈஸ்வரியே ஆத்தாளே அழைகின்றேனே ஆடி இங்கு வந்திடம்மா

தாலே ஆம அங்காளம்ம

மேல்மலையானூர் அங்காளியே மாக்காளி திரிசூலியே குறிசொல்ல வாடியம்மா எங்கு குலங்காக்கும் தெய்வம்மா அம்மா! அம்மா!

                                               (மலையனூர்)

சித்தாங்கு ஆடைகட்டி அதில் சிங்கரதம் மீது ஏறி தேர் ஓடும் வீதியிலே தாயே நீ ஆடி வந்திடம்மா அம்மா அம்மா அந்தரியே சுந்தரியே எங்க அங்காள ஈஸ்வரியே ஆடி வரும் தேரினிலே நீ அழகாக வருபவளே அம்மா அம்மா

                                               (மலையனூர்)


 ஆலைய வாசலிலே அலங்கார தோரணமாம்
அங்காள ஈஸ்வரிக்கு அபிஷேக பூஜைகளாம் ஆடிவரும் தேரினிலே நீ அசைந்து வரும் மாரியம்மா ஆயிரம் கண்கள் கொண்டவளே என் அங்காள ஈஸ்வரியே

 திருவிளக்கின் ஒளியினிலே தாயே திருவாக்குச் சொல்லிடம்மா மா விளக்கின் ஒளியினிலே மங்கை குறி சொல்லிடம்மா மாங்கல்யம் காத்திடம்மா எங்கள் பக்தர் குறை தீர்திடம்மா மலையனூர் அங்காளியே நீ மருளாடி வந்திடம்மா அம்மா அம்மா

                                               (மலையனூர்)


அம்மா நீ ஆடி வருகையிலே அம்மா அகிலமே ஆடுதம்மா அம்மா நீ ஓடி வருகையிலே தாயே உலகமே ஆடுதம்மா மாரி என்பவளே மகிமை பல செய்பவளே உடுக்கை சத்தம் கேட்டு நீயும் ஒடி வந்து நின்னுடம்மா... 

வேப்பிலை காரியம்மா நீ வேண்டும் வரம் தந்திடம்மா செவ்வாடை காரியம்மா நீ மருவத்தூர் மாரியம்மா அம்மா அம்மா

                                                (மலையனு



 இந்த வலைதளத்தில் உங்களுக்காக இந்த பாடலை பதிவிட்டு உள்ளவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon