ஐயப்பன் மங்கலம் பாடும் வரிகள் | Ayyappa Mangalam song lyrics
சபரிமலை தன்னில் வாழும் சாஸ்தாவுக்கு மங்களம்
தவமுனிவர் போற்றும் அந்த சன்னதிக்கு மங்களம்
இல முகவன் முருகனுக்கு இளவலுக்கு மங்களம்
இன்பமெல்லாம் தத்தருளும் இறைவனுக்கு மங்களம்
புலிமிசையே பவனிதரும் புனிதனுக்கு மங்களம்
புவிமயங்கும் மோகினியான் புதல்வனுக்கு மங்களம்
அன்புடனே அருள்புரியும் ஐயனுக்கு மங்களம்
அழகே உருவான எங்கள் மெய்யனுக்கு மங்களம்
வெற்றி தரும் வில்லெடுத்த வேந்தனுக்கு மங்களம்
வித்தகனாம் வீரமணி கண்டனுக்கு மங்களம்
பம்பைததி சேருகின்ற பக்தருக்கு மங்களம்
பத்தனள் பேர் பாடுகின்ற அனைவருக்கும் மங்களம்