கற்பூர நாயகியே பாடல் வரிகள் | karuppu naayagi songs lyrics Tamil
கற்பூர நாயகியே
கற்பூர நாயகியே காளி மகமாயி கருமாரியம்ப பொற்கோளில் கொண்ட சிவகாமியம்பா பூவிருந்த வல்லி தெய்வானையம்பா
(கற்பூர்)
விற்கோல வேத வல்லி விசாலாட்சி வழிக்கோல மாதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே கடராக வாழ்விப்பாய் என்னை நியே
(கற்பூர)
புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி நவ நவமாய் வடிவாகும் மகேஸ்வரி நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
(கற்பூர)
அம்மா கவலைகளைத் தீர்ததுவிடும் காளீஸ்வரி காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி உன்னடிமைச் சிறியோனை நீயாதரி
(கற்பூர)
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த உறவினடத்தில் முறையிடுவேன் தாயே! -எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற அன்னையரை கெஞ்சிடுதல் முறையோ - அம்மா
(கற்பூர)
கண்ணீரைத் துரைடத்துவிட ஓடிவாம்மா காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா சின்னவனின் குரல் கேட்டு முகம் திருப்பு சிரித்தபடி என்னை தினம் வழி அனுப்பு
(கற்பூர)
காற்றாகி கலையாகிக் கனலாகினாய் சுயிறாகி உயிராகி உடலாகினாய் நேற்றாகி இன்றாகி நாளாகினாய் நிலமாகிப் பயிராகி உணவாகினாய்
(கற்பூர)
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய் தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய் போற்றாத நாளில்லை தாயே உன்னை பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை
(கற்பூர)
இந்தப் பாடலை உங்களுக்காக பதிவிட்ட உள்ளவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon