Pambai Folk

காவடியாம் காவடி கந்தவேலன் காவடி பாடல் வரிகள் | kahan Badi Ham Kavadi Murugan songs lyrics Tamil

காவடியாம் காவடி கந்தவேலன் காவடி பாடல் வரிகள் |kahan Badi Ham Kavadi Murugan songs lyrics Tamil






காவடியாம் காவடி கந்தவேலன் காவடி 
கண்கொள்ளாக் காட்சிதரும் கடன்பனுக்குக் காவடி


வேல்முருகன் காவடி விதவிதமாய்க காவடி 
வெற்றிவேலன் காவடி வீரவேலன் காவடி


சின்னச் சின்னக் காவடி சிங்கார வேலன் காவடி 
வண்ணமயில் தோகையோடு ஆடிவரும் காவடி



பழனிமலைப் பாலனுக்குப் பால்குடத்தால் காவடி 
தேன்பழனி வேலனுக்குத் தேன்குடத்தால் காவடி
 சுவாமிநாத வேலனுக்குத் சந்தனத்தால் காவடி



பாலசுப்ர மணியனுக்குப் பஞ்சாமிர்தக் காவடி 
ஆறுமுக வேலனுக்கு அழகுமயில் காவடி 
வண்ண வண்ணக் காவடி வெற்றி வேலன் காவடி



மாயூர நாதனுக்கு மச்சத்தால் காவடி 
குன்றக்கூடிக் குமரனுக்குத் குறைவில்லாத காவடி 
பக்த ரெல்லாம் கொண்டாடும் காவடியாம் காவடி



பாமாலை பாடி ஆடி நாடிவரும் காவடி 
கண்கொள்ளாக் காட்சிதரும் கந்தவேலன் காவடி 
காவடியாம் காவடி காணவேண்டும் கண்கோடி


Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon