சத்தியஜோதி ஐயப்பன் பாடல் வரிகள் தமிழ் | Shakti Jyothi Ayyappa song lyrics
சத்திய ஜோதி தெரியுதையா
நித்திய வாழ்வு புரியுதையா
சாஸ்தா ஆலயம் தெரியுதையா
சங்கடம் எல்லாம் மறையுதையா
(சத்திய ஜோதி)
மாமலை ஏறிப் போகையிலே
மனதில் இன்பம் தோன்றுதையா
சபரிக் காட்டில் நடக்கையிலே
சந்நதி நிறைந்து தோன்றுதையா
(சத்திய ஜோதி
பதினெட்டாம் படிகள் தாண்டையிலே
பக்தியும் எல்லைத் தாண்டுதையா
பந்தளக் குழந்தையைகை காண்கையிலே
சிந்தையில் சொர்க்கம் தோன்றுதையா
(சத்திய ஜோ
ஐயனை மனதில் நினைக்கையிலே
ஐயம் எல்லாம் அகலுதையா
மகர ஜோதியைக் காண்கையிலே
மரணத்தின் பயமும் தீருதையா
(சத்திய ஜே
கார்த்தைக மாதம் மாலையிட்டு
காலையும் மாலையும் பூஜையிட்டு
இருமுடி தலையில் சுமந்து வந்து உன்
திருவடி துணையென நாடி நின்றோம்
(சத்திய ஜே
இந்தப் பாடல் வரிகள் உங்களுக்காக தந்தவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon