Pambai Folk

ஹர ஹர ஹர முருகனுக்கு ஆறுபடை வீடு பாடல் வரிகள் | superhit Murugar song lyrics Tamil

 ஹர ஹர ஹர முருகனுக்கு ஆறுபடை வீடு பாடல் வரிகள் | superhit Murugar song lyrics Tamil


அரகரஹா முருகனுக்கு ஆறுபடைவீடு
அவர் கருணையோடு காத்து நிப்பார் பழநியை பாரு

                 (அரகர)

பொன் பொருளும் புகழோடும் தந்திடுவாரு
அவர் புனிதமான திருத்தணியை நீ போய்பாரு

                  (அரகர)

குடும்பத்தோடு குன்றத்தில் நீ போய் பாரு
உன் குறைகள் எல்லாம் தீர்திடுவார் குமரன் இப்போது

                    (அரகர)

திருச்செந்தூர் கடலோரம் ஐயனை பாரு
உன் எதிரிகளை சூரசம்ஹாரம் செய்திடுவாரு

                     (அரகர)

சாமி மலை சன்னதியில் தரிசனம் பாரு
உன் சங்கடங்களை தீர்திடுவார் சுவாமி இப்போது

                     (அரகர)

சோலை மலை சன்னதியில் தரிசனம் பாரு
உன்னை சுகமோடு வாழ்ந்திடவே வரம் தருவாரு

                      (அரகா)


இயற்றி பாடியவர் ஜோதிடர். சி.ஆறுமுகம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய நிர்வாகி.


 ரசிகர்களுக்காக இந்த பதிவை பதிவிட்ட நண்பர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon