ஓடிவா முருகா நீ ஓடிவா கந்தா பாடல் வரிகள் தமிழில் | oadi va Muruga song lyrics Tamil
ஓடிவா முருகா நீ ஓடிவா கந்தா
உமையாள் தன் மகனே ஓடிவா முருகா
(ஒடிவா
கணபதி சோதரனே ஓடிவா முருகா
கண்கண்ட தெய்வமமே நீ ஆடிவா முருகா
ஆறுமுக வேலனாக ஓடிவா முருகா ஏறுமயில் ஏறி நீ ஆடிவா முருகா
(ஓடிவா)
தைமாதம் பிறந்திடவே ஓடிவா முருகா
தரணயில் கொண்டாட்டமா ஆடிவா முருகா
மலைமேலே தோரோட்டமா ஓடிவா முருகா
மலைக்கு கீழே பக்தர் ஆட்டம் ஓடிவா முருகா
(ஓடிவா)
பாலோடு பஞ்சாமிர்தம் ஓடிவா முருகா
பழனிமலை ஆண்டியாக ஆடிவா முருகா
தைபூச திருநாளில் ஓடிவா முருகா
தங்கதேர் பவனியிலே ஆடிவா முருகா
(ஓடிவா)
அடிவாரம் சுத்தி வந்தோம் ஓடிவா முருகா
ஆண்டி உன்னைகாண வந்தோம் ஆடிவா முருகா
அருளை எல்லாம் தருபவனே ஓடிவா முருகா
அன்னை சக்தி பாலகனே ஆடிவா முருகா
(ஓடிவா)
பன்னீர் அபிஷேகனாக ஓடிவா முருகா
பழனிமலை முருகனாக ஆடிவா முருகா
தண்டபாணி தெய்வமே நீ ஓடிவா முருகா
தங்கரதம் மீது ஏறி ஆடிவா முருகா
(ஓடிவா)
தண்டபானி தெய்வமே நீ ஓடிவா முருகா
தங்கரதம் மீது ஏறி ஓடிவா முருகா
தொண்டர்களின் உள்ளங்களில் ஓடிவா முருகா
கொண்டாடும் உள்ளங்களில் ஆடிவா முருகா
கூட்டமாக குரல் கொடுத்தோம் ஓடிவா முருகா
ஆட்டம் ஆடி பாட்டம் தீர்க்க ஆடிவா முருகா
ஆறுமுக பேரழகா ஓடிவா முருகா
ஆறுதலை தந்திடவே ஆடிவா முருகா
(ஓடிவா)
இந்த முருகர் பாடல் உங்களுக்கு லிரிக்ஸ் வழியாக தந்தவர்
கிருஷ்ணகிரி பம்பை தேவா 9944764493
1 Comments:
Click here for Commentsdeva pambai
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon